முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபுணர்கள் குழுவை ஏன் இன்னும் அமைக்கவில்லை? பெரியாறு அணை வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      தமிழகம்
Supreme-Court 2024-11-269

Source: provided

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு வழக்கில் அணை பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி ஏன் நிபுணர்கள் குழுவை இன்னும் அமைக்கவில்லை?  என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கும் நீரின் அளவை 120 அடியாக குறைக்கக் கோரி கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் மேத்யூவ் நெடும்பரா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முல்லைப் பெரியாறு வழக்கில் அணை பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி நிபுணர்கள் குழுவை, மத்திய அரசு ஏன் இதுவரை அமைக்கவில்லை? அணையின் கட்டமைப்பு ரீதியான ஆய்வு கடைசியாக எப்போது மேற்கொள்ளப்பட்டது?. அணை உரிமையாளர் என்ற முறையில் நிபுணர் குழுவை தமிழகம் அமைத்திருக்க வேண்டும்?. என்று சுப்ரீம் கோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியது.

இதையடுத்து தேசிய அணை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதிலும் தேசிய குழு அமைப்பதிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வரும் 22-ம் தேதி தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 10 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 10 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 12 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 12 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 10 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து