எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா; முதல் போட்டியில் பந்துவீச்சாளர்கள் களத்தில் தங்களது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
கொல்கத்தாவில்...
பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்தது.
பந்துவீச்சு தேர்வு...
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினர். இதில் பிலிப் சால்ட் ரன் ஏதுமின்றி அவுட் ஆகி வெளியேறினார். பென் டக்கெட் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பட்லர் அரைசதம்...
கேப்டன் ஜாஸ் பட்லர் நிலைத்து நின்று அரை சதம் கடந்தார். ஆனால் மறுமுனையில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 68 ரன்களும், ஹாரி புரூக் 17 ரன்களும் எடுத்தனர். இது தவிர ஜாக்கோப் பெத்தேல் (7), ஜேமி ஓவர்டன்(2), கஸ் அட்கின்சன்(2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
133 ரன்கள் இலக்கு....
இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 133 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.தொடக்க வீரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் , அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினர். அதில் சஞ்சு சாம்சன் 26 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுபுறம் அபிஷேக் சர்மா பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார் .
அபஷேக் சர்மா...
சிறப்பாக விளையாடி அரை சதமடித்த அவர் 79 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து திலக் வர்மா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதனால் இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட் டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது .இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. திலக் வர்மா 19 ரன்னுடனும், ஹர்திக் பாண்ட்யா 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
கேப்டன் பாராட்டு....
இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களை கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "இந்திய வீரர்கள் அனைவரும், மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டனர். முதல் பந்தில் இருந்தே, அவர்களது சுறுசுறுப்பு எனக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் களத்தில் தங்களது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார்கள்.
பொறுப்பை உணர்ந்து...
வருண் சக்ரவர்த்தி, களநிலவரம் அறிந்து சிறப்பாக பந்துவீசினார். எந்த நேரத்தில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. அர்ஷ்தீப் சிங், பொறுப்பை உணர்ந்து பந்துவீசுகிறார். இந்த இருவரும் முதல் 5 பேட்டர்களை வீழ்த்தி அசத்தியது, வெற்றிக்கு மிகமிக்கிய காரணம். ஹர்திக் பாண்ட்யா புதிய பந்தில் பந்துவீசுவதால், எனக்கு கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. கவுதம் கம்பீர் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தை கொடுத்துள்ளார். 2024 டி20 உலக கோப்பையில் விளையாடியதை விட சற்று வித்தியாசமாக விளையாட விரும்புகிறோம்" என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.
அர்ஷ்தீப்சிங் சாதனை:
இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் இந்த ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையும் சேர்த்து அவரது விக்கெட் எண்ணிக்கை 97-ஆக (61 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலிடம் (96 விக்கெட்) இருந்து கைப்பற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 11 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
சென்னையில் ஏ.டி.பி. டென்னிஸ்: உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதி
23 Jan 2025சென்னை: சென்னையில் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி நடத்த ரூ.1 கோடி - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
தமிழத்தில் இளவயது கர்ப்பம் அதிகரிப்பு: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
23 Jan 2025சென்னை: இளவயது கர்ப்பம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மாநில அரசின் கடமை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;
-
நாளை முதல் 2 நாட்களுக்கு சென்னையில் ட்ரோன்கள் பறக்கத்தடை
23 Jan 2025சென்னை: குடியரசு நாளையொட்டி சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் (ஜன.25, 26 ஆகிய தேதிகளில்) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
-
வேங்கைவயல் சம்பவத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி சி.பி.சி.ஐ.டி. மனு
23 Jan 2025புதுக்கோட்டை: வேங்கைவயல் சம்பவத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒருமாத கால அவகாசம் கோரி சி.பி.சி.ஐ.டி.
-
சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை
23 Jan 2025சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி, சென்னை கவர்னர் மாளிகை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர்த்
-
வாக்குறுதிகள் தொடர்பாக இ.பி.எஸ். குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என்.நேரு பதில்
23 Jan 2025சென்னை: வாக்குறுதிகள் தொடர்பாக இ.பி.எஸ்.ன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
டங்ஸ்டன் திட்டம் ரத்து : நாம் தமிழர் சீமான் கருத்து
23 Jan 2025சென்னை: டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து நாம் தமிழர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க பழங்குடியின குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி
23 Jan 2025ராய்ப்பூர்: குடியரசு தின விழாவில் பங்கேற்க ‘பைகா’ பழங்குடியின குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.;
-
அதிபர் டிரம்ப் அறிவிப்பு எதிரொலி: மெக்சிகோ திரும்புவோர் தங்க கூடாரங்கள் அமைப்பு
23 Jan 2025மெக்சிகோ சிட்டி; அதிபர் டிரம்ப் அறிவிப்பை அடுத்து நாடு திரும்புவோரை தங்க வைக்க மெக்சிகோவில் பிரம்மாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
-
உடல்நிலை சீரானது: ஞானசேகரனிடம் மீண்டும் சிறப்புக் குழு விசாரணை
23 Jan 2025சென்னை: உடல்நிலை சீரானதை தொடர்ந்து ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பதவிக்கு பணம் வாங்கினால் நடவடிக்கை: த.வெ.க. நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை
23 Jan 2025சென்னை: பதவிக்கு பணம் வாங்கினாலோ அல்லது பணம் கொடுத்தாலோ, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
அசாமில் பட்ஜெட் கூட்டத்தொடர்: கவர்னர் லஷ்மண் உரையுடன் வரும் 17-ம் தேதி தொடக்கம்
23 Jan 2025கவுகாத்தி: அசாமில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.17-ல் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் கவர்னர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா தொடக்க உரை நிகழ்த்த உள்ளார்.
-
ரூ.60 ஆயிரத்தில் தொடரும் ஒரு பவுன் தங்கம் விலை
23 Jan 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.60,200-க்கு விற்பனையானது.
-
உ.பி. மகா கும்பமேளாவுக்கு செல்ல வீடுகளில் கொள்ளையடித்த டெல்லியை சேர்ந்தவர் கைது
23 Jan 2025புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த நபர் மகா கும்பமேளாவுக்குச் செல்வதற்காக வீடுகளில் கொள்ளையடித்துள்ளார். இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் இதுவரை 10 கோடி பக்தர்கள் புனித நீராடல்
23 Jan 2025பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மகா கும்பமேளாவில் இ
-
தொல்லியல் பெருமைவாய்ந்த பொருள்களை காண கீழடி இணையதளம் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
23 Jan 2025சென்னை: கீழடியில் அகழாய்வு மூலம் தோண்டி கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பெருமைவாய்ந்த பொருள்களை இணையதளம் வாயிலாகக் காணும் வகையில் கீழடி இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.
-
மதுரை, டங்ஸ்டன் திட்டம் ரத்து அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி எடப்பாடி பழனிசாமி பதிவு
23 Jan 2025சென்னை; டங்ஸ்டன் திட்டம் ரத்து அ.தி.மு.க. மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
அதிபர் டிரம்ப் அறிவிப்பு எதிரொலி: அமெரிக்காவில் ஜன. 27-க்கு பின் அகதிகள் வருகைக்கு தடை
23 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கப்பட்ட அகதிகளின் பயணம் ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.;
-
உண்மையிலேயே தாக்கப்பட்டாரா? நடிகர் சயீப் அலிகான் விவகாரத்தில் மகாராஷ்டிரா அமைச்சர் சந்தேகம்
23 Jan 2025மும்பை: நடிகர் சயீப் அலி கான் உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா? என மகாராஷ்டிர அமைச்சர் நிதேஷ் ரானே கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கில் தபால் வாக்குப்பதிவு துவக்கம்
23 Jan 2025ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கில் தபால் வாக்குப்பதிவு நேற்று காலை முதல் தொடங்கியுள்ளது.
-
தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்
23 Jan 2025சென்னை: தமிழகத்தில் இன்று வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
23 Jan 2025மும்பை: ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்
-
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மறுவாழ்வுக்கு மத்திய அரசிடமிருந்து இன்னும் நிதியுதவி கிடைக்கவில்லை கேரள முதல்வர் பினராயி வேதனை
23 Jan 2025திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கென மத்திய அரசு இதுவரை எந்த உதவியும் வழங்கவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்த
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு அதிக தண்டனை: தமிழக அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு
23 Jan 2025சென்னை: சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் செய்வோருக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வகை செ
-
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து எழுதப்பட வேண்டும் அகழாய்வு முடிவுகளை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
23 Jan 2025சென்னை: தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.