முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: பிரதமருக்கு அண்ணாமலை நன்றி

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      இந்தியா
Annamalai 2024-01-16

Source: provided

புதுடெல்லி: டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர்  அண்ணாமலை நன்றி தெரிவித்தார். 

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக நேற்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் , இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது,

அரிட்டாபட்டி சுரங்க ஏலத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி. மதுரை அரிட்டாபட்டி பகுதி மக்கள் இன்று (நேற்று) நிம்மதியாக தூங்குவர். டங்ஸ்டன் சுரங்கம் தேவையென்றாலும் விவசாய பகுதி,பல்லுயிர் பெருக்கத்தை கருத்தில் கொண்டு சுரங்க ஏல ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் மற்றும் சுரங்கம் அமைய இருந்த பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட விவசாயிகள் குழு டெல்லியில் நேற்று முன்தினம் மத்திய சுரங்கத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை அவரது அமைச்சகத்தில் சந்தித்து பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து