முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மறுவாழ்வுக்கு மத்திய அரசிடமிருந்து இன்னும் நிதியுதவி கிடைக்கவில்லை கேரள முதல்வர் பினராயி வேதனை

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      இந்தியா
Pinaraye 2024-12-04

Source: provided

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கென மத்திய அரசு இதுவரை எந்த உதவியும் வழங்கவில்லை என்று  கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரள சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ​​வயநாடு தொகுப்புக்காக பெறப்பட்ட தொகை குறித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி  எம்.எல்.ஏ. குருக்கோளி மொய்தீன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்தார். அப்போது அவர், “வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பிறகு முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்காக  மத்திய அரசு ரூ.712.98 கோடி வழங்கியது. இதைத் தவிர, இம்மாதம் 17-ம் தேதி வரை வேறு எந்த உதவியையும் மத்திய அரசு வழங்கவில்லை.

நிலச்சரிவு மறுவாழ்வுக்காக ஆரம்பத்தில் மத்திய அரசிடமிருந்து ரூ.2,221 கோடி கோரினோம். பேரிடருக்குப் பிந்தைய தேவைகள் மதிப்பீடு அறிக்கையின்படி, இன்னும் அதிக நிதி தேவைப்படுகிறது. வயநாடு நிலச்சரிவை 'கடுமையான இயற்கை பேரழிவு' என்று மத்திய அரசு அறிவித்ததால், நாடு முழுவதும் உள்ள எம்.பி.க்கள் ரூ.1 கோடி வரை பங்களிக்கலாம். எனவே, உதவி கோரி நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் நான் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன்.

முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்காக  பெறப்பட்ட நிதி பேரிடரில் இருந்து தப்பியவர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும். மறுவாழ்வு செயல்முறை விரைவில் முடிக்கப்படும். ஜூலை 30 அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பியவர்களுக்காக, கல்பெட்டாவில் உள்ள எல்ஸ்டோன் எஸ்டேட்டில் 58.50 ஹெக்டேர் மற்றும் வயநாடு மாவட்டத்தில் உள்ள மெப்படி பஞ்சாயத்தில் உள்ள நெடும்பலா எஸ்டேட்டில் 48.96 ஹெக்டேர் பரப்பளவில் மாதிரி டவுன்ஷிப்களை கட்டுவதற்கான மறுவாழ்வுத் திட்டத்தை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து