எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நடிகை நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை ஐகோர்ட், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, மும்பையை சேர்ந்த 'நெட்பிலிக்ஸ்' நிறுவனம் வெளியிட்டது. இதில், நடிகர் தனுஷ் நிறுவனமான 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, நயன்தாராவுக்கு, நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு நயன்தாரா அளித்த பதிலில், தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன், மும்பையை சேர்ந்த, நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, தனுஷ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் 'படத்தில் நயன்தாராவின் நடிப்பு, குரல், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது. தற்போது, நெட்பிலிக்ஸ் நிறுவனம், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான வீடியோ காட்சிகள் உடன், நயன்தாரா திருமண வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. இதனால், எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இழப்பீடாக, 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, தனுஷ் மற்றும் நெட்பிலிக்ஸ் தரப்பில் காரசாரமான வாதம் நடந்தது.
நெட்பிலிக்ஸ் வாதம்: காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரமுடியாது. ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள், 3வது நபர் எடுத்தது. அப்படியே வழக்கு போட்டாலும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது. காஞ்சிபுரத்திலோ அல்லது மும்பையிலோ தான் வழக்கு போட முடியும். எனவே, தனுஷ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், இவ்வாறு வாதிட்டனர்.
தனுஷ் தரப்பு வாதம்: ஆவணப்படத்தில் உள்ள நானும் ரவுடிதான் படம் தொடர்பான காட்சிகள் அனைத்தும் தனது படப்பிடிப்பு தளத்தில் தான் எடுக்கப்பட்டது. படத்தின் அனைத்துக் காட்சிகளும் தனுஷூக்கு சொந்தமானவை. ஆடை, சிகை அலங்காரம் முதல் அனைத்தும் கம்பெனிக்கு சொந்தம் என தெரிந்தே பட ஒப்பந்தத்தில் நயன்தாரா கையெழுத்திட்டார். பட ஒப்பந்தம் கையெழுத்தான போது சென்னையில் தான் அலுவலகம் இருந்தது. எனவே, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியும், என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-01-2025.
22 Jan 2025 -
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டு பெண் தளபதி சுட்டுக்கெலை
22 Jan 2025போகாரோ, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டு பெண் தளபதி சுட்டுக் கெலை செய்யப்பட்டார்.
-
துருக்கி ஓட்டலில் தீவிபத்து: பலி எண்ணிக்கை 76 ஆனது
22 Jan 2025அங்காரா: துருக்கி ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.;
-
பக்தர்களின் வசதிக்காக சிறுவாபுரி கோவிலில் ரூ.45 கோடியில் மாற்றுப்பாதை: அமைச்சர் எ.வ.வேலு
22 Jan 2025சென்னை: சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரூ. 45 கோடி மதிப்பீட்டில் புதிய மாற்றுப்பாதை அமைக்கபடுவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
-
தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை-பழனி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
22 Jan 2025மதுரை : மதுரை- பழனிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே துரை அறிவித்துள்ளது.
-
பெரியார் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு: சென்னையில் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றோர் கைது
22 Jan 2025சென்னை : பெரியார் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
-
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க புதிய கட்டுப்பாடு உணவு பாதுகாப்பு துறை அறிவிப்பு
22 Jan 2025பழனி, பழனிமலை முருகன் கோவிலில் அன்னதானத்துக்கு புதிய கட்டுப்பாடை உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்பத்திருவிழா ஜன. 31-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
22 Jan 2025மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா வருகிற 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
-
வேட்புமனு ஏற்பில் குளறுபடி: ஈரோடு கிழக்கு தொகுதி புதிய அவலராக ஸ்ரீகாந்த் நியமனம்
22 Jan 2025ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பெங்களூருவைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு ஏற்கப்பட்ட குளறுபடி காரணமாக, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அ
-
உ.பி. மகா கும்பமேளா: இதுவரை 9.24 கோடி பேர் நீராடல்
22 Jan 2025லக்னோ: உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ம் தேதி தொடங்கியது.
-
டெல்லி போலீசை தவறாக பயன்படுத்துகிறது: பா.ஜ.க. மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
22 Jan 2025டெல்லி: டெல்லி போலீசை பா.ஜ.க. தவறாக பயன்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்;
-
புஷ்பா 2 இயக்குனர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை
22 Jan 2025ஐதராபாத்: 'புஷ்பா 2' படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து இயக்குனர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
-
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு: குடுவை, சங்கு வளையல்கள் கண்டெடுப்பு
22 Jan 2025சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை மற்றும் சங்குவளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
டெல்லியில் மதுதான் உள்ளது: ஆம் ஆத்மி ஆட்சி குறித்து பிரதமர் மோடி விமர்சனம்
22 Jan 2025புதுடெல்லி: டெல்லியில் மது கிடைக்கிறது; ஆனால், குடிநீர்தான் கிடைப்பதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார்.
-
ஈரோடு கிழக்கு தொகுதி நா.த.க. வேட்பாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
22 Jan 2025ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சீதாதட்சுமி மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
-
சிவகங்கையில் ரூ.1 கோடியில் மதிப்பில் மருது சகோதரர்களுக்கு சிலை: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் - வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையும் திறப்பு
22 Jan 2025சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1 கோடியில் மதிப்பில் அமையவுள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
-
100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு வேலை - சம்பளத்தை உடனே வழங்குக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Jan 2025சென்னை: தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு உடனடியாக , நிலுவை சம்பளம் மற்றும் வேலையை அரசு வழங்கிட வேண்டும்,” என்று அ.தி.மு.க.
-
பட்டறை தொழிலாளி உயிரிழப்பு: உண்மை நிலையை கண்டறிய ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
22 Jan 2025சென்னை : பட்டறை தொழிலாளி காவல் நிலையம் வாசலில் உயிரிழந்த சம்பம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்பம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கிண்டி கிங் நோய்த்தடுப்பு ஆய்வகத்திற்கு ரூ.12 கோடி தமிழக அரசாணை வெளியீடு
22 Jan 2025சென்னை: கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ.
-
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.164 கோடி மதிப்பில் 33 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் - ரூ.51 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்தார்
22 Jan 2025சிவகங்கை : மத்திய அரசு திட்டங்களையும் மாநில அரசு நிதியை செலவு செய்து செயல்படுத்தி வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 41 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்
22 Jan 2025ராமேசுவரம்: இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 41 பேர் நேற்று காலை தாயகம் திரும்பினர்.
-
அமெரிக்காவுக்கு திறமைசாலிகள் வருவதை விரும்புகிறேன்: ட்ரம்ப்
22 Jan 2025வாஷிங்டன்: திறமை வாய்ந்த மனிதர்கள் அமெரிக்காவில் குடியேறுவதை தான் விரும்புவதாகவும், இத்தகையவர்கள் அமெரிக்காவுக்குத் தேவை என்றும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவ
-
உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்து சைப் அலிகான் நன்றி
22 Jan 2025மும்பை, மருத்துவமனையில் அனுமதித்த ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்த சைப் அலிகான் நன்றி தெரிவித்தார்.
-
நடப்பு ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியீடு
22 Jan 2025டெல்லி, 2025-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
திடீர் உடல்நலக்கோளாறு: மருத்துவமனையில் ஞானசேகரன் அனுமதி
22 Jan 2025சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் திடீர் உடல்நலக்கோளாறு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்