முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. மகா கும்பமேளாவுக்கு செல்ல வீடுகளில் கொள்ளையடித்த டெல்லியை சேர்ந்தவர் கைது

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      இந்தியா
Jail

Source: provided

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த நபர் மகா கும்பமேளாவுக்குச் செல்வதற்காக வீடுகளில் கொள்ளையடித்துள்ளார். இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இதுவரை சுமார் 10 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும்.

இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் மகா கும்பமேளாவுக்குச் செல்வதற்காக வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரவிந்த் அலியா போலா என்ற நபர் கடந்த 17-ம் தேதி டாப்ரியின் ராஜ்புரியில் உள்ள 3 வீடுகளில் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் நகைகளைக் திருடியுள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அரவிந்த் அலியா, "எனது தந்தை ஒரு கூலித் தொழிலாளி. தாய் வீட்டு வேலை செய்கிறார். நானும், எனது நண்பர்களும் மகா கும்பமேளாவுக்குச் செல்ல விரும்பினோம். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக கும்பமேளா செல்வதற்கு பணம் இல்லை. அதனால் கொள்ளையடித்தேன்" என்று கூறியுள்ளார். இருப்பினும் அரவிந்த் கொள்ளையடிப்பது இது முதல் முறை அல்ல என்றும், அவர் மீது 16 திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து