Idhayam Matrimony

காத்துவாக்குல ஒரு காதல் இசை வெளியீட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      சினிமா
Kathuvakula-Oru-Kadhal 2025

Source: provided

சென்னை புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்.பா தயாரிப்பில், மாஸ் ரவி எழுதி இயக்கி  நாயகனாக நடித்திருக்கும் படம் ‘காத்துவாக்குல ஒரு காதல்’. இதில் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, ஆதித்யா கதிர், கல்லூரி வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜீ.கே.வி. மற்றும் மிக்கின் அருள்தேவ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சுபாஷ் மணியன் மற்றும் ராஜ்துரை ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் படக்குழுவினரை வாழ்த்து பேசிய ஆ.ராசா, உலகத்தில் இருக்கின்ற  எத்தனையோ காதல் கதைகளை எல்லாம் சுருக்கி வைத்து பார்த்தால் இரண்டே இரண்டு விஷயம் தான்.  உன்னை நான் காதலிக்கிறேன் அல்லது நான் காதலித்துக் கொண்டே இருப்பேன்.

இதற்கு தான் இவ்ளோ பெரிய இலக்கியங்கள் எல்லாம்.  இன்றைக்கு இருக்கிற சாதியம்,  அரசியல், பொருளாதார  வேறுபாடு, மதவெறி இவைகளை எதிர்த்து ஒரு  காதல் வெற்றிபெற வேண்டுமென்றால் அதற்க்கு இளமை மட்டும் காரணம் அல்ல; அதையும் தாண்டி ஒரு மனப்பக்குவமும், புரிந்துகொள்ளுகின்ற ஆற்றலும் வேண்டும் என்கின்ற அந்த உணர்வோடு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். 

அப்படிப்பட்ட ஒரு படம் வெற்றி பெறவேண்டுமென்று நான் விழைகிறேன். அதற்காக உழைத்த அத்தனை பெருமக்களையும் பாராட்டி, என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து