Idhayam Matrimony

புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியவர்: விவேகானந்தர் பிறந்தநாளில் ஜனாதிபதி முர்மு புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      இந்தியா
Murmu 2023 04 18

Source: provided

புதுடெல்லி : சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும்  நேற்று கொண்டாடப்பட்டது. விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி இந்திய மக்களுக்கு ஒரு புதிய தன்னம்பிக்கையை கொண்டுவந்தவர் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது;

விவேகானந்தரின் பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைச் செலுத்துகிறேன். இந்தியாவின் மகத்தான ஆன்மிகச் செய்தியை மேற்கத்திய உலகிற்கு எடுத்துச் சென்றார். இந்திய மக்களிடையே அவர் ஒரு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார். இளைஞர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தவும், தேசத்தைக் கட்டியெழுப்பவும், மனிதகுலத்திற்கு சேவை செய்யவும் அவர் ஊக்கமளித்தார். அவரது மரபு உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து