முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனியில் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      ஆன்மிகம்
Palani 2023-08-21

Source: provided

பழனி : தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். இங்கு குறிப்பாக கேரளாவில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் ஆன்மீக பயணமாக பழனி கோவிலுக்கும் வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அடிவாரம், பஸ்நிலையம், கிரிவீதி, மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு பக்தர்கள் கூடினர்.

மேலும் மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அய்யப்ப பக்தர்கள் வருகையால் அடிவார பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. இதனை போலீசார் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. தைப்பூசத்தையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, காரைக்குடி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தற்போது பாதயாத்திரையாக பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். அவர்கள் கிரி வீதியில் உற்சாகமாக ஆடிப்பாடி காவடி எடுத்து மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இனி வரும் காலங்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் சாலைகளில் பாதுகாப்பு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து