முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 போட்டிகளில் மட்டும் விளையாடி ரூ.900 கோடி சம்பாதித்த நெய்மர்

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      விளையாட்டு
Neymar -2025-01-11

Source: provided

பிரேசிலியா : 2 போட்டிகள் மட்டுமே விளையாடி 101 மில்லியன் யூரோவை நெய்மர் சம்பளமாக பெற்றுள்ளார்.

42 நிமிஷங்கள்... 

பிரேசிலை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் 2024ஆம் ஆண்டில் 2 போட்டிகளில் சேர்த்து 42 நிமிஷங்கள் மட்டுமே விளையாடி 101 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 882 கோடி ) சம்பாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது கால்பந்து உலகில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது கால்பந்து வாழ்க்கையில் 717 போட்டிகளில் விளையாடியுள்ள நெய்மர் 439 கோல்கள் அடித்துள்ளார். 279 முறை கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார். 

சாதாரணமில்லை.... 

2023-ல் பி.எஸ்.ஜி.யில் இருந்து சௌதி புரோ லீக்கில் அல்-ஹிலால் அணியில் சேர்ந்தார் நெய்மர்.  பார்சிலோனா அணியில் கலக்கிய நெய்மர் பந்தினை கட்டுப்படுத்தும் திறமையில் பல ஜாம்பவான்களை விடவும் சிறப்பாக இருப்பதாக வர்ணனையாளர்கள் கூறுகிறார்கள். மெஸ்ஸி, ரொனால்டோ புகழ்பெற்ற காலத்தில் தனியாளாக இவ்வளவு புகழ்பெறுவது சாதாரணமில்லை. அதனால்தான் நெய்மர் ரசிகர்கள் அவரை ‘கால்பந்தின் இளவரசன்’ என்கிறார்கள். காயம் காரணமாக அவரால் தொடர்சியாக விளையாட முடியவில்லை. 

காயம் காரணமாக...

கடந்த 2017-ல் நெய்மருக்கு 200 மில்லியன் டாலர் ஊதியமாக பி.எஸ்.ஜி அளித்ததாக தகவல்கள் வெளியாகியன. ஆனால், தொடர்ச்சியாக காயம் காரணமாக அவரது சந்தை மதிப்பு வெகுவாக குறைந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு சீசனில் விளையாட நெய்மருக்கு 130 மில்லியன் டாலர் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுதான் உலகத்திலேயே அதிகபட்ச தொகை என்கிறார்கள். இண்டர் மியாமி அணியில் மீண்டும் மெஸ்ஸி, நெய்மர், செர்ஜிகோ இணைவார்கள் என தகவல் வெளியானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து