Idhayam Matrimony

அயலக தமிழர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      தமிழகம்
CM-1 2025-01-12

Source: provided

சென்னை : ‘வேர்களைத் தேடி' திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், தமிழ் மொழி, கலைகள் குறித்து 2 ஆண்டுகளுக்கு அயலக தமிழர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அயலகத் தமிழர் நாளை முன்னிட்டு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஞாயிற்றுகிழமை நடந்த நிகழ்ச்சியில் அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவிற்கு நான் சென்றபோது அயலகத் தமிழர்கள் காட்டிய பாசத்தை மறக்க முடியாது.

எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ்நாட்டில் இருக்கும் உணர்வை அயலகத் தமிழர்கள் தருகின்றனர். அயலகத் தமிழர்களால் பாலைகள் சோலைகளாகின. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டில் குடியேறிய மக்களால்தான் பாலைகள் சோலைகளாகின. வேர்களைத் தேடி திட்டத்தின் மூலம் 157 இளைஞர்கள் தாயகம் திரும்பி இருக்கின்றனர்.

அதில் 38 இளைஞர்கள் பயணத்தின் இறுதிநாளான இன்று (நேற்று) அரங்கத்தில் இருக்கின்றனர். வேர்களைத் தேடி திட்டம் எனது அரசியல் வாழ்க்கையின் மைல்கல்லாக உள்ளது. வேர்களைத் தேடி திட்டம் என் மனதுக்கு மிக நெருக்கமான திட்டம். நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை அயலகத்தில் வசிக்கிற தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாக பயிற்றுவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

உங்களின் கோரிக்கைகளை தீர்த்து வைப்பது எனது கடமை. 100 ஆசிரியர்கள், தமிழ்க் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து தமிழர் வாழும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்த பயிற்றுநர்கள் அந்த பகுதியில் இருக்கக்கூடிய தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து தமிழ் மொழி, கலைகள் குறித்து 2 ஆண்டுகளுக்கு நேரடி பயிற்சி அளிப்பர். இதற்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்கும். ஆசிரியர்கள், கலைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உலகை உலுக்கும் உக்ரைன் போராக இருந்தாலும் சரி. மனதை உருக்கும் இஸ்ரேல் போராக இருந்தாலும் சரி. தமிழர்களை தேடிச் சென்று ஆதரவுக் கரம் நீட்டி வருகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து