Idhayam Matrimony

இளம் மாணவர்களே இந்தியாவின் பெரிய பலம் : லண்டனில் ஓம் பிர்லா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      உலகம்
Om-Birla 2023 07 25

Source: provided

லண்டன் : இன்றைய இந்தியாவின் பெரிய பலம் அதன் இளம் மாணவர்களிடம் உள்ளது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசியுள்ளார்.

பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா,  இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், லண்டன் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்களிடம் ஓம் பிர்லா உரையாடினார். அப்போது அவர் பேசும்போது, இன்றைய இந்தியாவின் பெரிய பலம் அதன் இளம் மாணவர்களிடம் உள்ளது என பேசியுள்ளார்.

நாட்டின் வளர்ச்சியை தங்களுடைய மனப்பான்மை, சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் போட்டி தன்மை ஆகியவற்றால் இந்திய மாணவர்கள் முன்னோக்கி கொண்டு செல்கின்றனர். இவற்றை கொண்டு, இந்தியாவுக்கு ஒரு புதிய திறனையும், சக்தியையும் அவர்கள் அளிக்கின்றனர். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் திறமை, நம்பிக்கை மற்றும் கண்டுபிடிக்கும் திறன் ஆகியவை அதிகரித்து வருகிறது என்றார். அவர் தொடர்ந்து, ஒரு புறம் உலகில் இளம் தலைமுறையின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. ஆனால் மறுபுறம் இந்தியாவில், இளைஞர்களின் திறமை அதிகரித்து வருகிறது. இதுவே எங்களுடைய பெரிய பலம் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து