Idhayam Matrimony

உ.பி. மகா கும்பமேளா இன்று தொடங்குகிறது : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கிறார்கள்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      இந்தியா
UP 2025-01-12

Source: provided

பிரயாக்ராஜ் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உ.பி. மகா கும்பமேளா இன்று தொடங்குகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகா கும்பமேளா உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்.26-ம் தேதியுடன் முடிவடைகிறது. பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதால் கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அங்கு கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள்.

மகா கும்பமேளாவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. 45 நாட்கள் நடக்கும் திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் கலந்துகொள்ள வருபவர்களுக்காக தற்காலிக குடில்களை அம்மாநில அரசு அமைத்துள்ளது. மேலும் சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி சிற்றுண்டி பகுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில மருத்துவ உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் மகா கும்பமேளா இன்று தொடங்குவதை முன்னிட்டு, மலைக்குகைகளிலும் வனங்களிலும் வசிக்கும் நாகா துறவிகள் உள்ளிட்ட பல வகை துறவிகளும் குவிந்துள்ளனர். பிரயாக்ராஜ் நகரை நோக்கி சாதுக்களும், துறவிகளும், சன்னியாசிகளும்,அகோரிகளும் வந்த வண்ணம் உள்ளனர். விதவிதமான வேடங்களில் வந்த அகோரிகள் வண்ணப்பொடிகளை தூவியும் கழுத்தில் மண்டை ஓடு மாலையுடன் மந்திரங்கள் முழங்க தெருக்களில் உலா வந்த போது பக்தர்கள் அவர்களை பக்தி பரவசத்துடன் வணங்கினர்.

ஹேமலதா திவாரி என்ற பக்தர் கூறுகையில், இங்கே மிகவும் குளிராக இருக்கிறது, இருந்தாலும் இந்த சூழல் நன்றாக உள்ளது. நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து