Idhayam Matrimony

ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீடிப்பார்: பி.சி.சி.ஐ.

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீடிப்பார் என்று பி.சி.சி.ஐ. ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு... 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரில் மோசமான தோல்வியைத் தழுவிய இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்ததுடன் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கோப்பையையும் இழந்தது. இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் பேட்டிங் முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டாலும், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 0-3 என்ற கணக்கில் முழுமையாக தொடரை இழந்து ஒயிட்வாஸ் ஆனது பெறும் விமர்சனத்தை எழுப்பியது.

முழு நேர கேப்டனாக... 

மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகியதால் அவருக்குப் பதிலாக துணைக் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோகித்துக்குப் பிறகு பும்ராவே முழு நேர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பார்டர் - கவாஸ்கர் டிராபி நடந்து கொண்டிருந்த போது, ​​இந்திய டிரஸ்ஸிங் ரூமில் ரோகித் ஷர்மாவும், கௌதம் கம்பீரும் ஒத்துப்போகவில்லை என்றும், அது அணியை பாதிக்கும் என்றும் யூகிக்கப்பட்டது.

ரோகித் சர்மா முடிவு... 

பிசிசிஐ அதிகாரிகள், தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் மும்பையில் நேற்று முன்தினம் விவாதித்தனர். சொந்த மண்ணில் ஒரு ஒயிட்வாஷ் உள்பட கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 6-இல் இந்திய அணி தோல்வியடைந்தது.  அணித் தேர்வுக்குழு புதிய கேப்டனைத் தேர்ந்தெடுக்கும் வரை இந்திய டெஸ்ட், ஒருநாள் கேப்டனாக தொடர ரோகித் சர்மா முடிவு செய்துள்ளார். சரியான நேரத்தில் இந்தியாவை வழிநடத்த தேர்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரருக்கு தனது முழு ஆதரவையும் வழங்க சர்மா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐந்து போட்டிகள்... 

சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கியமான ஒருநாள் போட்டிகள் இன்னும் ஆறு வாரங்களில் இந்திய அணி விளையாட இருப்பதால், கேப்டனை மாற்றுவது சரியாக இருக்காது. இது அணிக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடவிருக்கிறது. 37 வயதான ரோகித் சர்மா அந்த தொடருக்கு தேர்வு செய்யப்பட மாட்டார் என்ற தகவல்கள் ஊகங்களில் பரவி வருகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின்னரே ரோகித் சர்மா அணியில் இருப்பாரா? அல்லது நீக்கப்படுவாரா? என்பது தெரியவரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து