Idhayam Matrimony

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார செலவுக்காக வாக்காளர்களிடம் ரூ. 40 லட்சம் கேட்கும் டில்லி முதல்வர் அதிஷி

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      இந்தியா
Adishi 2024-11-18

Source: provided

புதுடில்லி : டில்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம்  உள்பட செலவுக்காக ரூ. 40 லட்சம் வரை தனக்கு தேவைப்படுவதாக டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான அதிஷி பேசியுள்ளார்.

டில்லியூனியன் பிரதேச தேர்தலில் ஒரேகட்டமாக பிப்ரவரி 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இடையே கடும் நிலவுகிறது.

தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வரும் அதிஷி பேசியிருப்பதாவது, “இத்தேர்தலில் போட்டியிட எனக்கு ரூ. 40 லட்சம் வரை தேவை. இதற்காக டில்லி மக்களிடமும் நாட்டு மக்களிடமும் ஆதரவு கோருகிறேன். உங்கள் ஆதரவுடன் தேர்தலில் கல்காஜி பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறேன்” என்று பேசியுள்ள அவர், மக்களிடம் தேர்தல் நன்கொடை  அளித்து உதவுமாறு சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “கடந்த 5 ஆண்டுகளில், ஒரு எம்.எல்.ஏ.வாக, ஓர் அமைச்சராக, இப்போது, டில்லிமுதல்வராக நான் இருப்பதற்கு.. நீங்கள் எனக்கு ஆதரவு தந்தீர்கள். உங்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் இல்லாமல் இவையனைத்தும் சாத்தியமாகியிருக்காது. கல்வியறிவு பெற்ற ஒரு இளம் பெண்ணாக நான் அரசியலில் தடம்பதிக்க, நீங்கள் அளித்த நம்பிக்கையும் நன்கொடையும் உதவியது. நீங்கள் இல்லாமல் நான் தனியொரு ஆளாக இந்த பாதையில் செல்ல முடியாது.  இப்போது, இன்னொரு தேர்தல் பிரசாரத்தை எதிர்கொள்ளவிருக்கிறோம். இதில் உங்களின் பேராதரவு மீண்டும் தேவைப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தில் உங்களின் பங்களிப்பாக நன்கொடை அளித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் (அதற்கான இணையதள முகவரியையும் அவர் பகிர்ந்துள்ளார்). நாம் ஒன்றிணைந்து முன்னேற்றத்துக்கான இந்த பாதையில் நம்பிகையுடன் தொடருவோம்” என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து