எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2024-25 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபியின் இரண்டாவது சுற்று போட்டியில் டில்லி அணிக்காக இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விளையாட விருக்கிறார். வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ள சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் டில்லி அணிக்காக ரிஷப் பந்த் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டில்லி ரஞ்சி அணியில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடுவாரா? என இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்று டில்லி கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. விராட் கோலி கடைசியாக 2012 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியில் விளையாடியிருந்தார். ஆனால், ரிஷப் பந்த் விளையாடுவதை அவரே உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபிக்கான தொடரின் இறுதிப்போட்டியில் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார் பந்த். டில்லி அணி தற்போது 14 புள்ளிகளுடன் குரூப்-டி பிரிவில் மூன்றாம் இடம்பிடித்துள்ளது. பந்தைத் தொடர்ந்து மற்ற இந்திய வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் முறையே அவர்களின் அணியான பஞ்சாப் மற்றும் மும்பை அணியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
____________________________________________________________________
ரஞ்சி டிராபி: தமிழக அணி அறிவிப்பு
2024-25 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபிக்கான தமிழக கிரிக்கெட் அணியில் சாய் கிஷோர் கேப்டனாகவும், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட தொடரில் விளையாடிய ஆல்ரவுண்டர் ஷாரூக் கான், வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இரட்டைசதம் விளாசிய நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதால் அவர் அணியில் இடம்பெறவில்லை. முந்தைய சுற்றுகளில் விளையாடி ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி தொடரில் விளையாடவிருப்பதால், அணியில் இடம்பெறவில்லை.
தமிழ்நாடு அணி: ஆர்.சாய் கிஷோர் (கேப்டன்), என்.ஜெகதீசன் (துணை கேப்டன்), விஜய் சங்கர், பாபா இந்தர்ஜித், முகமது அலி, ஆண்ட்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்சன் பால், பூபதி வைஷ்ண குமார், அஜித் ராம், லக்ஷய் ஜெயின், லோகேஷ்வர், சந்தீப் வாரியர், திரிலோக் நாக், சித்தார்த், முகமது.
____________________________________________________________________
தொடரை கைப்பற்றியது ஆஸி.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஆஷஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து பந்துவீச்சில் தடுமாறியது. அந்த அணியில் முன்னணி வீராங்கனையான எல்லிஸ் பெர்ரி (60 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை. இதனால் 44.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 4 விக்கெட்டுகளும், ஆலிஸ் கேப்ஸி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 48.1 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து 159 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகளும், கிம் கார்த் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025 -
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க.
15 Jan 2025ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வாக்கு சேகரித்தார்.
-
ரஷ்யா ஏவுகணை தாக்குலை தடுக்க மின்சாரத்தை துண்டித்தது உக்ரைன்
15 Jan 2025கீவ், ரஷ்யா அதிரடி தாக்குதலில் இருந்து தப்பிக்க பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக உக்ரைன் மின்சாரத்தை துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
15 Jan 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. அணை நீர்வரத்து 381 கன அடியாக நீடிக்கிறது.
-
உங்களது ஆதரவுக்கு நன்றி: நடிகர் அஜித்குமார் உருக்கம்
15 Jan 2025துபாய், உங்களது ஆதரவு, வாழ்த்துகள் மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்
-
திருவள்ளுவர் சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை: குறள் வழி நடந்து சமத்துவ சமுதாயம் பேணுவோம் என பதிவு
15 Jan 2025சென்னை, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
-
மதுரை - தூத்துக்குடி இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் பணியில் எந்த சிக்கலும் இல்லை: தெற்கு ரயில்வே
15 Jan 2025சென்னை, மதுரை - தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணியில் எந்த சிக்கலும் இல்லை. எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் உயிரிழப்பு
15 Jan 2025மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.
-
சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பவர்களுக்கான வெகுமதி 25 ஆயிரம் ரூபாயாக உயர்வு: மத்திய அரசு புதிய அறிவிப்பு
15 Jan 2025புதுடெல்லி, இந்தியாவில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நல்ல உள்ளங்களுக்கு வெகுமதி தற்போது வழங்கப்படும் ரூ.5 ஆயிரத்தில் இ
-
பூக்கும் புன்னகையில் மனம் நிறைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
15 Jan 2025சென்னை, முதல்வர் மு.க ஸ்டாலின் தனது வலைதள பதிவில், மாளவிகா ஐயர் என்பவரின் பதிவை பகிர்ந்து பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
-
உலகம் முழுதும் எதிரொலிக்கும் திருக்குறளின் போதனைகள்: திருவள்ளுவர் தினத்தில் கவர்னர் புகழாரம்
15 Jan 2025சென்னை, திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க அனைத்து நாடுகளுக்கும் விரும்பம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்
15 Jan 2025மாட்ரிட், இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொள்ள அனைத்து நாடுகளும் விரும்புகின்றன என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை உயிரிழப்பு
15 Jan 2025திருச்சி, திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழக பா.ஜ.க. புதிய தலைவராக மீண்டும் அண்ணாமலைக்கு வாய்ப்பு? இந்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது
15 Jan 2025சென்னை, தமிழக பா.ஜ.க.
-
இனி ஒரு நாள் ஊதியம் ரூ.5000: கிராமிய கலைஞர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தார் முதல்வர்
15 Jan 2025சென்னை, சென்னை சங்கமம் விழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம், ரூ.5000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.
-
காங். புதிய தலைமை அலுவலகம்: சோனியா காந்தி திறந்து வைத்தார்
15 Jan 2025டெல்லி, காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழாவில் ராகுல் காந்தி, சோனியா பங்கேற்றனர்.
-
3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி: நாட்டின் வலிமையை மேலும் அதிகரிக்கும் என பதிவு
15 Jan 2025மும்பை, இந்திய கப்பற்படைக்கு மேலும் வலுகூட்டும் வகையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ்.
-
வள்ளுவர் தினம்: கமல் புகழாரம்
15 Jan 2025சென்னை, அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
மோசமான வானிலை - அடர் மூடுபனி: டெல்லியில் 100 விமானங்கள், 26 ரெயில் சேவைகள் தாமதம்
15 Jan 2025டெல்லி, புது டெல்லியில் நேற்று காலை முதல் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் அடர்த்தியான மூடுபனியால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரெயில்கள் தாமத மாகியுள்ளதா
-
தேசிய ராணுவ தினம் கொண்டாட்டம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
15 Jan 2025புதுடெல்லி, தேசிய ராணுவ தினம் கொண்டாடப்பட்டதையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
2 ஆயிரம் கி. காய்கறி, பழங்களால் தஞ்சை பெருநந்திக்கு அலங்காரம்
15 Jan 2025தஞ்சை, பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக தஞ்சைப் பெரிய கோவிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
-
அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பலி 25 ஆனது
15 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
-
யு.ஜி.சி. நெட் தேர்வுக்கான மாற்று தேதிகள் அறிவிப்பு
15 Jan 2025புதுடெல்லி, பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வு நடைபெறும் மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மேலும் 100 பள்ளிகளுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு: தமிழக அரசாணை வெளியீடு
15 Jan 2025சென்னை, தமிழ்நாட்டில் 2022-2023, 2023-2024-ம் கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு சுமார் ரூ.15 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்
-
பாலமேடு ஜல்லிக்கட்டில் 19 மாடுபிடி வீரர்கள் காயம்
15 Jan 2025மதுரை, மதுரை பாலமேட்டில் 1,100 காளைகள், 910 வீரர்களுடன் விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 19 பேர் காயமடைந்தனர்.