முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டத்தை பொறுத்தே சம்பளம்: இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. கட்டுப்பாடு

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : இந்திய அணி வீரர்களின் மோசமான ஆட்டத்தை தடுக்க சில கட்டுப்பாடுகளை பி.சி.சி.ஐ. விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எதிர்கால கேப்டன்... 

அண்மையில் மும்பையில் நடந்த பி.சி.சி.ஐ. மீட்டிங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் பி.சி.சி.ஐ. முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்திய அணியின் எதிர்காலம் குறித்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும் ரோகித் சர்மாவிற்கு அடுத்து இந்திய அணியின் எதிர்கால கேப்டன் குறித்த பேச்சு வார்த்தையும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முக்கிய முடிவுகள் குறித்தும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

கடுமையான  நடவடிக்கைகள்...

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த பின்னர் இந்திய அணியின் நிர்வாகம் இந்திய அணியின் மீதும், இந்திய அணியின் வீரர்கள் மீதும் கடுமையான சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ.-யும் தங்களது நிர்வாகத்தின் உரிய அனுமதியின்றி வீரர்கள் தங்களது குடும்பத்தாருடனோ, உறவினர்களுடனோ எவ்வித தொடர்களுக்கும் பயணிக்க கூடாது என்ற முடிவையும் எடுத்திருந்தது.

சம்பளத்தில் கைவைப்பு...

மேலும் வீரர்களின் மோசமான ஆட்டத்தை தடுக்க தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு இனிவரும் எந்த ஒரு தொடரையும் இந்திய வீரர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

திறமைக்கு ஏற்ப ஊதியம்.... 

அந்தவகையில் இனி இந்திய அணியின் வீரர்கள் விளையாடும் எவ்வித தொடர்களுக்கும் அவர்களுக்கு செயல்பாடுகளின் அடிப்படையில் சம்பள விகிதம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் பி.சி.சி.ஐ வீரர்களுக்கு தகுதிக்கேற்ப வருடாந்திர ஒப்பந்த பட்டியலின் படி சம்பளத்தை வழங்கி வருவதால் வீரர்கள் மெத்தனமாக இருப்பதாகவும், அதனை தடுக்க இனி திறமைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கவனமாக விளையாடுவதற்காக... 

இதன் காரணமாக ஒவ்வொரு தொடரிலும் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவினை எடுத்து இனி பங்களிப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளதாம். இதன் காரணமாக இனிவரும் தொடர்களை இந்திய வீரர்கள் முக்கிய தொடர்களாக எடுத்து கவனமாக விளையாடுவார்கள் என்பதனாலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து