முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கில் பிரபல பாப் பாடகருக்கு ஈரானில் மரண தண்டனை

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      உலகம்
Cort 2023 07-15

Source: provided

தெஹ்ரான் : நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல பாப் பாடகருக்கு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் அமீர் உசைன் மக்சவுத்லூ (வயது 37). உடல் முழுவதும் பச்சை குத்தியிருக்கும் இவர் டாட்டாலூ என்று பொதுவாக அழைக்கப்படுகிறார். இவர் ஈரானின் இளைய தலைமுறையினரின் அரசியல் மற்றும் சமூக அம்சங்கள் குறித்து அடிக்கடி வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கினார். 

இந்நிலையில் இவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. விபசாரத்தை ஊக்குவித்தல், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தது உள்ளிட்ட வழக்குகளும் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் தேடப்பட்ட பாடகர் அமீர் உசைன் மக்சவுத்லூ கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்தார். பின்னர் துருக்கி போலீசார் அவரை 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈரானிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் ஈரானில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அதில் தெய்வ நிந்தனை தொடர்பான வழக்கில் பாடகர்  அமீர் உசைன் மக்சவுத்லூ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, பாடகருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல என்றும், மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து