முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை போதாது: ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      இந்தியா
Kolkata 2024 08 18

கொல்கத்தா, பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய்க்கு அளித்த ஆயுள் தண்டனை போதாது, கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்த பயிற்சி பெண் டாக்டர், கடந்தாண்டு ஆக., 9ல் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். மருத்துவ கல்லுாரி கருத்தரங்கு அறையில் நடந்த இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். மாநில போலீசருக்கு பதிலாக சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கை நடத்தினர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. சஞ்சய் ராய்க்கு, கோல்கட்டா நீதிமன்றம் ஆயுள் தண்டனை, அதாவது சாகும் வரை சிறைத்தண்டனை விதித்தது. இறந்த மருத்துவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்தத் தீர்ப்பு, பல்வேறு தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சீல்டா நீதிமன்றத்திற்கு வெளியே ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் கொலை வழக்கு; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 

குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்திருக்க வேண்டும், ஆயுள் தண்டனை விதித்தது தவறானது என்று மருத்துவர்கள் கூறினர்.

படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாயார் கூறியதாவது: நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். இது அரிதிலும் அரிதான வழக்கு அல்லவா? பணியில் இருந்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாங்கள் திகைத்துப் போயுள்ளோம். இந்தக் குற்றத்திற்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருந்தது என்றார்.

படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை கூறியதாவது:  இந்தக் குற்றம் 'அரிதிலும் அரிதான' பிரிவின் கீழ் வரவில்லை என்று நீதிபதி கூறினார். இது குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்காததை நியாயப்படுத்துகிறது. மற்ற அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் வரை போராட்டத்தைத் தொடருவோம்.

ஜூனியர் மருத்துவர்கள் கூறியதாவது: நாங்கள் கடுமையான மற்றும் முன்மாதிரியான தண்டனையை விரும்பினோம், இந்த தண்டனை போதாது. இன்னும் கடுமையான தீர்ப்பைக் கோரி உயர் நீதிமன்றங்களுக்குச் செல்வோம் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து