முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலியை திருமணம் செய்ய இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் இளைஞர்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      இந்தியா
Marege 2023 04 10

Source: provided

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் காதலியை திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி பகுதிக்குட்பட்ட நாகர் பசார் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன். 34 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்துவந்த இவர்களின் காதலுக்கு பெற்றோர் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மதம் மாறி திருமணம் செய்ய காதலன் வீட்டில் சம்மதிக்காததால், காவல் நிலையத்தில் காதலி புகாரளித்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கருவைக் கலைக்க வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

பஸ்தி காவல் நிலைய அதிகாரி, இது குறித்து இரு வீட்டாரையும் அழைத்துப் பேசி காதலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சதாம் உசேன் மதம் மாறி தனது பெயரை சிவசங்கர் சோனி என மாற்றிக்கொண்டு காதலியை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் அப்பகுதியில் இருந்த கோயிலில் ஹிந்து முறைப்படி நடைபெற்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பெரும் திருப்பமாக திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதி காவல் துறையிடம் உண்மையைக் கூறியுள்ளது. அதாவது, மதம் மாறி திருமணம் செய்துகொள்ள காதலன் வீட்டில் ஒப்புக்கொள்ளாததால், இருவரும் பேசிவைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக காவல் துறை அதிகாரியிடம் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து