முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை: மேற்குவங்க முதல்வர் அதிருப்தி

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      இந்தியா
Mamata-1

கொல்கத்தா, கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு திருப்திகரமானதாக இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கான தண்டனை விவரம் நேற்று வெளியானது. இதில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க கொல்கத்தா சியால்டா நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது. வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில் சாகும்வரை சிறை தண்டனை விதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்திகரமானதாக இல்லை என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு குறித்து மம்தா மேலும் பேசியதாவது,

''மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக்கின் தீர்ப்பை ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டேன். மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்கள் தொடர் கோரிக்கை. அதில் நிலையாக இருந்தோம்.  எனினும் இது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு. இது குறித்து மேலும் என்னால் பேச முடியாது. இதுபோன்ற மற்ற 3 பாலியல் வழக்குகளில் 54 - 60 நாள்களில் விசாரணையை முடித்து மாநில காவல் துறை மரண தண்டனையை உறுதி செய்திருந்தது. இது மிகவும் தீவிரமான வழக்கு. இந்த வழக்கு எங்கள் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால், முன்பே மரண தண்டனையை உறுதி செய்திருப்போம். கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதில் தீர்ப்பை உறுதி செய்ய சிபிஐக்கு 5 மாதங்கள் தேவைப்பட்டுள்ளது.

தேவைப்படும்போது மாநில காவல் துறைக்கு இந்த வழக்கு மாற்றப்படும் எனக் கூறப்பட்டிருந்தாலும், முழுவதுமாக எங்களிடம் இருந்து இந்த வழக்கு அவர்களாலேயே கையாளப்பட்டது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்கள் முதன்மை நோக்கமாக இருந்தது. இந்தத் தீர்ப்பில் எங்களுக்குத் திருப்தி இல்லை'' எனக் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து