முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெய்டு நடத்தி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமில்லை நயினார் நாகேந்திரன் பேட்டி

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      தமிழகம்
Nayanar-Nagendran 2023-11-1

Source: provided

திருநெல்வேலி: கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே போதும்,  ரெய்டு நடத்த வேண்டிய அவசியமில்லை.   என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி யில் பா.ஜ.க. சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், திருப்பரங்குன்றம் பகுதியில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர்கள் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. ரெய்டை கொடுத்து அ.தி.மு.க.வை பா.ஜ.க. கூட்டணிக்கு வரவழைக்க முயற்சி நடக்கிறதா?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், "கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும்; ரெய்டு நடத்தி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க.வினர் தொடர்புடைய வீட்டில் மட்டும் ரெய்டு நடக்கவில்லை. தி.மு.க.வினர் வீட்டிலும் நடக்கிறது. யார் யார் வீட்டில் பணம் இருக்கிறது என வருமானவரித்துறை நினைக்கிறதோ அங்கு ரெய்டு நடக்கும். நாளை உங்கள் வீட்டில் கூட ரெய்டு நடக்கலாம்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

பா.ஜ.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து