முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடர்: ரோகித், ஜெய்ஸ்வால் சொதப்பல்

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      விளையாட்டு
23-Ram-52

Source: provided

புது டெல்லி: ரஞ்சி கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் ரோஹித், ஜெய்ஸ்வால் மோசமாக விளையாடி ஆட்டமிழந்தார்கள். இந்தியாவின் டெஸ்ட், ஒருநாள் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோகித் சர்மா 3 ரன்களுக்கும் மற்றுமொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

கடும் விமர்சனம்...

பார்டர் கவாஸ்கர் தொடரில் 1-3 என தோல்வியடைந்த இந்திய அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ரோஹித், கோலி ஓய்வு பெற பலரும் கருத்து தெரிவிக்க அடுத்ததாக உள்ளூர் போட்டிகளில் விளையாடும்படி பி.சி.சி.ஐ. பரிந்துரைந்தது. இதிலும் விராட் கோலி பங்கேற்காமல் ஏமாற்றம் அளித்தார். ரோஹித், ஜெய்ஸ்வால் மும்பை அணியில் ஜம்மு காஷ்மீருக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார்கள்.

வெரும் 3 ரன்கள்...

ஆகிப் நபி ஓவரில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். ரோகித் (3) ஆட்டமிழந்த விதம் தான் மிகவும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. ரஹானே (12), ஷ்ரேயாஷ் ஐயர் (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். ஷிவம் துபே டக்கவுட்டானர். மும்பை சார்பில் ஷர்துல் தாக்குர் மட்டுமே சிறப்பாக விளையாடி 51  ரன்கள் எடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் சார்பில் உமர் நஜிர் 4, யுதிர் சிங் 3, ஆகிப் நபி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள். மும்பை அணி 33 ஓவர் முடிவில் 129/9 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து