முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுக்கட்சியினர் தி.மு.க. இணைந்ததை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரியும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2025      தமிழகம்
Udayanidhi-1 2023-10-1

Source: provided

சென்னை: மாற்றுக்கட்சியினர் மற்றும் நா.த.க.வினர்  திமுகவில் இணைந்ததை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரியும் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

 நா.த.க.வினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- நீங்கள் கழகத்தின் கொள்கையை ஏற்று இயக்கத்தில் சேர்ந்திருக்கின்றீர்கள்.  ஆனால் உங்களைப்போல ஆயிரக்கணக்கானோர் வருவதற்கு சில தயக்கத்தோடு அங்கு இருப்பார்கள். அவர்கள் அத்தனை பேரையும் கழகத்தில் இணைக்க வேண்டிய முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.

தேர்தல் காலங்களில் ஆளுங்கட்சியை எதிர்த்து எதிரணியில்தான் அனைவரும் ஒன்று சேர்வார்கள். ஆனால், இன்று எதிர்க்கட்சியில் இருந்த நீங்கள், ஆளுங்கட்சியில் உங்களை இணைத்துள்ளீர்கள் என்றால் 2026 தேர்தல் முடிவுகள் உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடிய ஒன்றுதான். இதை பார்க்கும் போது எதிர்க்கட்சியினருக்கு வயிற்று எரிச்சல் வரத்தான் செய்யும். அதற்காகவே மீண்டும் உங்களுக்கு பாராட்டும், வாழ்த்தும்.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர்    நம்முடைய தமிழ்நாட்டின் அடையாளங்களை ஒவ்வொன்றாக அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். திருவள்ளுவருக்கு காவிய சாயம் பூசுவது. தமிழ்த்தாய் வாழ்த்தை கொச்சைப்படுத்துவது. தமிழ்த்தாய் வாழ்த்தை பாடக்கூடாது என சொல்வது. சட்டசபையை புறக்கணித்து செல்வதுதான் அவருடைய வேலை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து