முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் உற்பத்தி ஒப்பந்தம் ரத்து: இலங்கை அரசின் முடிவால் அதானி பங்குகள் திடீர் சரிவு

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2025      இந்தியா
Adani 2024-01-05

Source: provided

மும்பை : அதானி நிறுவனத்துடனான மின் உற்பத்தி ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்ததையடுத்து அதானி பங்குகள் சரிவை சந்தித்தன. 

அதானியின் கிரீன் எனெர்ஜி நிறுவனத்திற்கு மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இரண்டு இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. 440 மில்லியன் டாலர் அளவிலான ஒப்பந்தத்தை இலங்கை அரசு தற்போது ரத்து செய்துள்ளது. இதனால் பங்குச் சந்தையில் அதானியின் கிரீன் எனெர்ஜி பங்கின் விலை 6% சரிவை சந்தித்துள்ளது.

484 மெகாவாட் அதானி காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தம், சந்தை விலையை விட 70 சதவீதம் அதிக விலைக்கு வழங்குவதற்கான ரணில் விக்கிரமசிங்கேயின் அமைச்சரவை எடுத்த முடிவை ஜனாதிபதி அனுர குமார திசா நாயக தலைமையிலான அமைச்சரவையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 தற்போது அந்த ஒப்பந்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலின்போது அனுர குமார திசா நாயக இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். காற்றாலை மின்சார உற்பத்தியை மேம்படுத்த சர்வதேச டெண்டர் கோரப்படும் என உறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைச்சரவை கடந்த மாதம் 30-ந்தேதி ஒப்பந்தத்தை திரும்ப பெற முடிவு செய்தது. கடந்த ஆண்டு மே மாதம் அதானி நிறுவனத்துடன் இலங்கை அரசு ஒப்பந்தம் போட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2025 நிதியாண்டின் 3-வது காலாண்டில் கடந்த ஆண்டை விட 2.33 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தது. கடந்த நிதியாண்டில் 2,311 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய நிலையில் 2025-ல் 2365 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக தெரிவித்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து