முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை: அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2025      உலகம்
court 2024-12-30

Source: provided

 வாஷிங்டன் : அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்து அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த அரசாணைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே கூறியிருந்தபடி பதவியேற்ற முதல் நாளிலேயே பல அதிரடி அரசாணைகளை அவர் பிறப்பித்தார்.

அவற்றில், அமெரிக்காவில் பிறந்த எவரும் அந்த நாட்டு குடியுரிமை பெறும் அடிப்படை உரிமையைப் பறிக்கும் ஆணையும் ஒன்று. அதன்படி, அமெரிக்காவில் சட்டபூர்வமாகத் தங்கியிராத தாய்க்கும் அமெரிக்க குடிமகனாகவோ, நிரந்தர குடியேற்ற உரிமை பெறாதவராகவோ உள்ள தந்தைக்கும் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புசார் குடியுரிமை கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் இந்த அரசாணை மூலம் அந்தக் குழந்தைகளின் குடியுரிமை பறிக்கப்பட்டால், மருத்துவக் காப்பீடு போன்ற அரசின் அடிப்படை உதவிகள் அவர்களுக்குக் கிடைக்காமல் போகும். அவர்கள் பெரியவர்கள் ஆகும்போது அமெரிக்காவில் சட்டபூர்வமாக வேலை செய்யும் உரிமை, வாக்களிக்கும் உரிமை, அநீதிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் இல்லாமல் போய்விடும். எனவே, பிறப்புசார் குடியுரிமைக்கு எதிரான டிரம்ப்பின் அரசாணையை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று 22 மாகாண அரசுகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஜான் கோ பெனூர், இந்த ஆணையை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதாக எவ்வாறு கருத முடியும் என்று அரசுத் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், இது ஒரு வெளிப்படையான அரசியலமைப்பு எதிரான உத்தரவு என்று விமர்சித்த நீதிபதி, தான் 40 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதியாக இருப்பதாகவும், இப்படியொரு அரசியலமைப்பு முரணான வழக்கை பார்த்ததாக நினைவு இல்லை என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, டிரம்ப் பிறப்பித்த அரசாணையை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து