முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செயற்கை சூரியனை உருவாக்கியது சீனா

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2025      உலகம்
China 2024 07 31

Source: provided

பீஜிங் : செயற்கை சூரியனை உருவாக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

சீனா பல்வேறு துறைகளில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், தொடர்ந்து 10 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீடிக்கும் செயற்கை சூரியனை உருவாக்கி, வெற்றிபெற்றுள்ளது. இதிலிருந்து மின் உற்பத்தி சாத்தியமானால், அது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படும்.

அணு உலை வெற்றிகரமாக பிளாஸ்மாவை 1,000 விநாடிகள் தாங்கி சாதனை படைக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த 2023 இல் அதன் முந்தைய சாதனையான 403 விநாடிகள் (17.76 நிமிடங்கள்) என்ற சாதனையை முறியடித்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த முறை 403 வினாடிகள் தான் நீடித்துள்ளது. எனவே இது புதிய உலக சாதனை என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.

சூரியனின் ஆற்றல் உற்பத்தியைப் பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்ட அணுக்கரு இணைவு எனும் நியூக்ளியர் பியூஷன் மூலம் ஆற்றலை தயாரிக்க, செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சி விஞ்ஞானிகளுக்கு நீண்டகால இலக்காக இருந்து வருகிறது,

ஆனால் செயற்கை சூரியனுக்கு 10 கோடி டிகிரி செல்சியஸுக்கு மேல் தேவையான வெப்பநிலையை அளிப்பது மற்றும் அதனை தொடர்ந்து செயற்கை சூரியனுக்கு அளிப்பது, அதனை பராமரிப்பது எப்போதும் ஒரு சவாலாக உள்ளது. இந்த நிலையில்தான், செயற்கை சூரியனுக்கு 1,000 விநாடிகளுக்கு கணினியை நிலைநிறுத்தியிருப்பதன் மூலம், இணைவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான சாதனயை எட்டியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து