முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக நீதியை குழிதோண்டி புதைக்கிறது: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2025      தமிழகம்
OPS 2024-11-11

Source: provided

சென்னை : சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் அரசாக தி.மு.க.அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் மொத்த வருமானம்  2024-2025ம் ஆண்டு 3,11,239 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டு உள்ளது.  கடந்த மூன்று ஆண்டுகளில் பொருட்கள் மற்றும் சேவை வரி, மதிப்புக்கூட்டு வரி, முத்திரைத் தாள் கட்டணம், வாகன வரி, மத்திய அரசின் பங்கு ஆகியவற்றின் மூலம் 1,03,747 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் அரசுக்கு கிடைத்துள்ளது. இது தவிர, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு உள்ளிட்டவற்றின் மூலம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கூடுதலாக கிடைத்து வருகிறது. இது அனைத்தும் மக்கள்மீது கூடுதல் நிதிச் சுமையை சுமத்தியதன் மூலம் கிடைத்த வருவாய்.

இதேபோன்று, கடந்த 43 மாத கால தி.மு.க. ஆட்சியில் மட்டும் 3,48,362 ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. இவ்வளவு கடன் பெற்றும்,  மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டவில்லை.  தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், அரசு, பொதுத் துறை நிறுவனங்கள்  7,351 கோடி ரூபாயை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு செலுத்தாமல் உள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் அரசு தாமதப்படுத்திக் கொண்டே வருகிறது. பொங்கல் பரிசுத் தொகையுடன் 1,000 ரூபாய் ஊக்கத் தொகை தருவதற்கு பணமில்லை. திருக்கோவில்களில் அடிப்படை வசதிகளைகூட செய்து தர பணமில்லை.  சட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழைகூட வழங்க அருகதையற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்புவதற்கு வக்கில்லாத அரசாக தி.மு.க. விளங்கிக் கொண்டிருக்கிறது. சமூக நீதி என்று சொல்லிக் கொண்டு சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் அரசாக தி.மு.க.அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சி முடியும் தருவாயிலாவது நிதி மேலாண்மையில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தி நிதிச் சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில் தமிழ்நாட்டை சீரழித்த தி.மு.க. சீரழியும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து