முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னருக்கு நடத்தை விதிகள் வேண்டும்: தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      தமிழகம்
DMK-Offces 2023 03 31

Source: provided

சென்னை: கவர்னருக்கு நடத்தை விதிகள் வகுக்க வேண்டும் உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் (புதன்கிழமை) நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற  தி.மு.க. எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் (புதன்கிழமை) நடைபெற்றது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையொட்டி அதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. கவர்னர் பதவி நீக்கப்படும் வரை- அரசியல் மயமாகும் கவர்னர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட - கவர்னர்களுக்கு நடத்தை விதிகள் உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் கவர்னர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்திடவும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க. வலியுறுத்தும்.

2. மக்களின் துணையுடன் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மத்திய பா.ஜ.க. அரசை பணிய வைத்து- டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதலமைச்சருக்கும் துணை நின்ற மக்களுக்கும் நன்றி.

3. உருக்கு இரும்பு 5,370 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் அறிமுகமாகியுள்ளது என உலகுக்கு அறிவித்த தி.மு.க. அரசின் சாதனையை மத்திய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

4. கூட்டாட்சி தத்துவம் - மாநில கல்வி உரிமை - உயர் கல்வி அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக் கோரி தி.மு.க. மாணவரணி - தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்.

யுஜிசியின் புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி வருகிற பிப்.6-ம் தேதி தில்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

5. சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்.

6. தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாமல் கடந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய பா.ஜ.க. அரசு, இந்த முறை தமிழ்நாட்டின் திட்டங்கள், பேரிடருக்கு நிதி ஒதுக்கீடும், மாநிலத்திற்கு முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவித்திட வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து