முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கை அரசு விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      உலகம்
Sri-Lanka 2024-03-25

Source: provided

கொழும்பு : இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தற்செயலான நிகழ்வு என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்திய கடல் எல்லையைத் தாண்டி, இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு மத்திய அரசு, இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இலங்கை அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டருந்த காரைக்கால் மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை கைது செய்தது. இதில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். கைது செய்யப்பட்ட 13 பேரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாக வும் தகவல்கள் வெளியாகின.

இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இலங்கை விளக்கம் கொடுத்துள்ளது. அதில், இந்திய மீனவர்கள் தாக்க முற்பட்டபோது தற்செயலாக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்படும்போது மீனவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தாக்க முற்பட்டபோது தற்செயலாக இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில், 2 மீனவர்கள் லேசான காயம் அடைந்ததாக இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து