முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனிதா வில்லியம்ஸை பத்திரமாக மீட்க எலான் மஸ்கிடம் டிரம்ப் வேண்டுகோள்

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      உலகம்
Sunita-Williams 2024-03-29

Source: provided

வாஷிங்டன் :  விண்வெளியில் தங்கியுள்ள நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ்எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று எலான் மஸ்க் உறுதிபடுத்தியுள்ளார்.

வில்லியம்ஸும், வில்மோரும் கடந்த ஜூன் 5, 2024 அன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால், இருவரும் ஏழு மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர்.

விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்,என் உடல் கொஞ்சம் மாறிவிட்டது என்று நினைக்கிறேன். ஆனால் நான் அதே எடையைக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:  சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் ஜூன் 2024 முதல் ஏழு மாதங்களாக விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் மார்ச் மாதத்தில் ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ-10 விண்கலத்தில் திரும்ப உள்ளனர்.

இருவரையும் பத்திரமாக அழைத்து வாருங்கள் என்று அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜோ பைடன் அரசு அவர்களை கைவிட்டுவிட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். இவ்வாறு எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து