முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை முத்தலாக் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி: முத்தலாக் கூறியதாக முஸ்லீம் ஆண்கள் மீது இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது.

முஸ்லீம் சமூகத்தில் மனைவிக்கு மூன்று முறை 'தலாக்' (விவாகரத்து) என்று கூறி கணவன்மார்கள் விவகாரத்து செய்யும் வழக்கம் இருந்தது. 2019-ல் மத்திய அரசு முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வந்ததையடுத்து, மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முஸ்லீம் ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

இந்நிலையில், முத்தலாக் தடைச் சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது.

முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்த தரவுகளை வழங்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்தால் அது செல்லுபடியாகாது, கணவன்-மனைவி இடையே உறவு தொடர்கிறது, முத்தலாக் கூறி கணவன் மீது வழக்கு தொடரப்பட்டாலும் அவர்களின் உறவு தொடர்வதாகவே அர்த்தம் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், மனுதாரர்கள் பெரும்பாலாக, முத்தலாக்கை ஆதரிக்க வேண்டும் என்று வாதிடவில்லை, மாறாக அவ்வாறு செய்யும் ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்வது உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளையே எதிர்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து