முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு பதில்: அரியானா அனுப்பும் தண்ணீரைதான் நானும் குடிக்கிறேன்: பிரதமர் மோடி

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : அரியானா அனுப்பும் தண்ணீரையே டெல்லியில் உள்ள பிரதமர் உள்பட அனைவரும் பருகி வருகின்றனர் என விஷம் கலப்பு பற்றிய கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதிலளித்து உள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, யமுனை ஆற்றில் விஷம் கலப்பு பற்றி கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டை குறிப்பிட்டு பிரதமர் பேசும்போது, டெல்லியின் முன்னாள் முதல்வர் ஒருவர் அரியானாவின் மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார்.

தோற்று விடுவோம் என்ற அச்சத்தில், பேரழிவை ஏற்படுத்த கூடிய சிலர் (ஆம் ஆத்மியை குறிப்பிட்டு) நிலைகுலைந்து போயிருக்கின்றனர். அதனால், அப்படி பேசுகின்றனர். டெல்லியில் உள்ள மக்களிடமிருந்து அரியானா மக்கள் வேறுபட்டவர்களா? அரியானாவில் வசிப்பவர்களின் உறவினர்கள் டெல்லியில் வசிக்கவில்லையா? தங்களுடைய சொந்த மக்கள் குடிக்கும் நீரில் அரியானா மக்கள் விஷம் கலப்பார்களா?

அரியானா அனுப்பும் தண்ணீரை டெல்லியில் உள்ள அனைவரும் பருகி வருகின்றனர். இந்த பிரதமரும் அந்த தண்ணீரையே குடிக்கிறார் என பேசியுள்ளார். சமீபத்தில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் அரியானாவில் இருந்து யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.

எனினும், யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்பட்டு மக்களை சென்றடைவதற்கு முன்பு டெல்லி நீர் வாரியத்தின் என்ஜினீயர்கள் சரியான தருணத்தில் கண்டறிந்து, தடுத்தனர். இல்லையெனில் இனப்படுகொலை எனும் அளவுக்கு அதிக அளவிலான மக்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள். நீருடன் விஷம் கலப்பதற்கு முன்பே அது தடுக்கப்பட்டது என கூறினார்.

இதனை தொடர்ந்து கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான உண்மையான சான்றுகளை சமர்ப்பிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையம் அவரிடம் கேட்டு கொண்டுள்ளது. இதன்படி உண்மையான மற்றும் சட்ட ரீதியிலான சான்றுகளை சமர்ப்பிக்கும்படியும் கேட்டு கொண்டது. இதனால், இந்த விவகாரம் பற்றி ஆய்வு செய்து, முறையான நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து