முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை வெல்லுமா இந்தியா? புனேயில் இன்று 4-வது போட்டி

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      விளையாட்டு
30-Ram-50

Source: provided

புனே: இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை வெல்லுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் புனேயில் இன்று 4-வது போட்டி நடைபெறுகிறது.

சுற்றுப்பயணம்.... 

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் 3 போட்டி முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து வெற்றி...

கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடைபெற்ற 2-வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 3- வது ஆட்டத்தில் இங்கிலாந்து 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பதிலடி கொடுக்குமா?

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இன்று ( 31 -ம் தேதி) நடக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அணியில் மாற்றம்... 

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும். ஷிவம் துபேக்கு வாய்ப்பு வழங்கப்படும். துருவ் ஜூரல் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சர்வதேச போட்டியில் ஆடிய வேகப்பந்து வீரர் முகமது ஷமி முதல் ஆட்டத்தில் விக்கெட் எடுக்கவில்லை. இதனால் அர்ஷ் தீப்சிங் அணிக்கு திரும்புவார். கடந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு எடுபடவில்லை. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மட்டுமே தொடர்ந்து நிலையாக பந்து வீசி வருகிறார். பேட்டிங்கில் திலக் வர்மா, அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்ட்யா நல்ல நிலையில் உள்ளனர்.

தொடரை இழக்கும்... 

ராஜ்கோட்டில் வெற்றி பெற்றதால் இங்கிலாந்து தொடரை இழக்காமல் இருந்தது. இன்றைய போட்டியும் அந்த அணிக்கு முக்கியமானது. வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தோற்றால் தொடரை இழந்து விடும்.  இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் பட்லர், டக்கெட், லிவிங்ஸ்டன் ஆகியோரும் பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

27 போட்டிகளில்... 

இரு அணிகளும் இன்று மோதுவது 28-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 27 ஆட்டத்தில் இந்தியா 15 -ல், இங்கிலாந்து 12-ல் வெற்றி பெற்றுள்ளன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து