தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருண் ஜேட்லி மைதானத்தில் கோலியை காணக்குவிந்த ரசிகர்கள்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      விளையாட்டு
30-Ram-51

Source: provided

புதுடில்லி: விராட் கோலியைக் காணக் குவிந்த ரசிகர்களால் டில்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானம் நிரம்பி வழிந்தது.

உள்ளூர் போட்டிகளில்.... 

ரஞ்சி டிராபிக்கான டில்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் விளையாடும் போட்டி டில்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் திடலில் நடைபெற்று வருகிறது. சர்வதேசப் போட்டிகளில் சரியாக விளையாடாத இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட அறிவுறுத்தப்பட்டனர். இதனால், ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களும் அவரவர் மாநில அணிகளுக்காக விளையாடினர். முதல் சுற்றில் விராட் கோலி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விளையாடவில்லை.

12 ஆண்டுகளுக்கு பின்...

இந்த நிலையில், ரயில்வேஸ் அணிக்கு எதிராக விராட் கோலி விளையாடுவதாகத் தெரிவித்ததால், டிக்கெட் விற்பனையும் களைகட்டியது. அதுமட்டுமின்றி மைதானத்தில் இருக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்டன. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளூர் சிவப்புப் பந்து போட்டிகளில் விராட் கோலி விளையாடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

நிரம்பி வழிந்த மைதானம்...

விராட் கோலியின் வருகையால் 10,000 க்கும் அதிகமான ரசிகர்கல் வருவார்கள் என்று டில்லி கிரிக்கெட் சங்கம் கணித்திருந்தது. ஆனால், டாஸ் தொடங்குவதற்கு முன்பிருந்தே ரசிகர்கள் கூட்டத்தால் அருண் ஜேட்லி மைதானம் நிரம்பி வழிந்தது. ரஞ்சி டிராபியில் முதல் நாள் போட்டியை இதுவரை 10,000 க்கும் அதிகமானோர் பார்த்தது கிடையாது. விராட் கோலியின் வருகையால் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, துணை ராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அதிக ரசிகர்கள் வருகையால், முதலில் கௌதம் கம்பீர் ஸ்டாண்ட் 6000 இருக்கைகள் திறந்துவிடப்பட்டன. அதிகளவிலான ரசிகர்களின் வருகையால் கிஷம் பேடி ஸ்டாண்டில் உள்ள 14,000 இருக்கைகளும் திறந்துவிடப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து