முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவர் லிப்டிங் பெஞ்சு பிரஸ் போட்டியில் தமிழக வீரர் லட்சுமணன் தேசிய சாதனை

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      விளையாட்டு
Lakshmanan-2025-02-06

சென்னை, பவர் லிப்டிங் பெஞ்சு பிரஸ் போட்டியில் தேசிய அளவிலான சாதனை நிகழ்த்திய தமிழக வீரர் லட்சுமணனுக்கு  வடசென்னை காவல்துறை இணைக்கமிஷனர் மனோகர், தங்கத்தமிழ்மகன் விருது வழங்கி வாழ்த்தினார்.

ராயபுரம் ரவுண்டப் மக்கள் இயக்கம் சார்பில்  சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. ரகுபதி ராஜா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் வடசென்னை காவல்துறை இணைக்கமிஷனர் மனோகர் கலந்து கொண்டு, கேரம் போட்டியில் உலக அளவில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடி  தந்த செல்வி எம். காஷிமாவுக்கு புதுமைப்பெண்  விருது வழங்கினார் அவரை தொடர்ந்து மிக் ஜாம் புயலினால் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது மணலி அருகே  பாதிக்கப்பட்ட அத்திப்பட்டு கிராம  மக்களுக்கு வீடு வீடாக  சென்று நிவாரண பொருட்கள் வழங்கிய ராஜ காந்தி,  பரதநாட்டியத்தில் புதுமைகளை நிகழ்த்தி  வரும் செல்வி பிரியா ஆகியோருக்கும் அவர் புதுமைப்பெண் விருதுகளை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச்செயலாளர் அசிப் வண்ணாரப்பேட்டை எம் சி ரோடு ஜி.ஏ.ரோடு மற்றும் சுற்று வட்டார வியாபாரிகள் சங்கத் தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு தங்க தமிழ் மகன் விருதுகள் வழங்கப்பட்டன எதிர்பாராத துக்கநிகழ்வுகளில் வாடும்  குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்கும் அந்தோணி நெப்போலியன்,  கோவாவில் நடந்த பவர் லிப்டிங் பெஞ்சு பிரஸ் போட்டியில் 50 வயதினர் பிரிவில் தேசிய அளவில் வெற்றி பெற்ற லஷ்மணன் சிலம்ப போட்டியில் கின்னஸ் சாதனைகள் புரிந்த ஜெ.ருஷ்ணசாமி ஏழை எளிய மக்களுக்கு சுய தொழில் பயிற்சிகளை வழங்கி வரும் பிரதீப் குமார், யாதும்  ஊரே யாவரும் கேளிர்  அமைப்பின் நிறுவனர் கார்த்திகேயன்,  மேடை பாடகர் மாசிலாமணி ஆகியோரை பாராட்டும் வகையில் தங்கத்தமிழ்மகன் விருதுகள் வழங்கப்பட்டன. 

அனைவருக்கும் விருதுகளை வழங்கி இணைக்கமிஷனர் மனோகர்  பாராட்டினார் ,.இந்த விழாவில் பரதநாட்டிய கலைஞர் ப்ரியா குழுவினர் நடத்திய யாரடி நீ மோகினி பாடலுக்கு, மாணவியர் போட்டிப்போட்டு  ஆடிய பரத நாட்டியம்  அனைவரின் பாராட்டையும் கைத்தட்டலையும் பெற்றது. விழாவில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு முன்னாள் கவுன்சிலர்சம்பத், 42 வது வார்டு கவுன்சிலர் ரேணுகா, எழுத்தாளர் லதா சரவணன்,  தமிழ் மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் செ.இரா விசயநாதன், அகில இந்திய மீனவர் சங்க பொதுச் செயலாளர் எம்.இ.ராஜா ஆகியோர் கலந்து கொண்டு  விருது  பெற்றவர்களை வாழ்த்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து