முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு காங். எதிர்ப்பு

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      உலகம்
Congress 2023 01 25

Source: provided

அமெரிக்கா: இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருடன் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த டொனால்ட் டிரம்ப், காஸாவை அமெரிக்க ராணுவத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவுள்ளதாக அறிவித்தார். மேலும், போா்க்களத்திலிருந்து வெடிக்காத ஆபத்தான குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களையும், இடிந்த கட்டடங்களையும் அகற்றி, அப்பகுதியின் மறுகட்டமைப்புக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். அப்பகுதி மக்கள் அனைவருக்கும் குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும் ஒரு பொருளாதார வளா்ச்சி உருவாக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த முடிவை, அமெரிக்காவின் நட்பு நாடுகள் உள்பட பெரும்பாலான உலக நாடுகள், இரு தேசத் தீா்வுக்கு எதிரானது என்று நிராகரித்துள்ளன. 

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஸாவின் எதிர்காலம் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துகள் விசித்திரமானதாகவும் ஆபத்தானதாகவும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவும் உள்ளன. மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட ஒரே தீர்வு, இஸ்ரேலுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் வாழ வேண்டும் என்ற பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பத்தை பூர்த்தி செய்வது மட்டுமே. டிரம்பின் கருத்துக்கு மற்ற நாடுகள் தங்களின் நிலைபாட்டை தெரிவித்துள்ளன, மோடி அரசும் தெளிவான நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து