முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      தமிழகம்
Ragupathy 2024-12-21

Source: provided

சென்னை: கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு எடப்பாடி பழனிசாமி  படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று (பிப்.10) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமையாக நிறைவுற்றிருக்கிறது. திறப்புவிழா தான் நடத்தப்பட வேண்டும். இது அ.தி.மு.க.  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். எங்களுடைய அமைச்சர் முத்துசாமியும் அதை தொடர்ந்து கூறி வருவது அனைவருக்கும் தெரியும்.

எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பயமும் இல்லை என்று கூறுவதெல்லாம் தவறு. அ.தி.மு.க.  அவருடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? என்பதை அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பேசும் பேச்சுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். எனவே, எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

சீமான் மீதான அவதூறு வழக்குகளைக் கொண்டு அவரைக் கைது செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தாக வேண்டும். 

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்று எதுவும் வரவில்லை. தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். புதிதாக ஒரு மதக் கலவரத்தை யார் உருவாக்க நினைத்தாலும், அதற்கு தமிழக அரசு இடம் கொடுக்காது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து