முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட அடையாளம் தெரியாமல் உருமாறி போன இஸ்ரேல் பிணைக்கைதிகள்

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      உலகம்
Israel 2025-02-10

Source: provided

ஜெருசலேம்: ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளை கண்டு உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் பகுதி​யில் நோவா இசைக் கச்சேரி நடைபெற்​றது. அப்போது, திடீரென அந்தப் பகுதிகளில் நுழைந்த ஹமாஸ் தீவிர​வாதிகள் 100-க்கும் மேற்பட்​டவர்களை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்​துச் சென்​றனர். இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்​டதையடுத்து, இரு தரப்பிலிருந்தும் பிணைக் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, சிறைப்பிடிக்கப்பட்டு 500 நாட்​களுக்குப் பிறகு எல். சாராபி, ஓர்லெவி மற்றும் ஒகத் பென் அமி என்ற மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்களின் உடல்​நிலை மோசமாக காணப்பட்​டது. எலும்பும், தோலுமாக உருமாறிப்போன அவர்களை கண்டு உறவினர்கள் கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்​தனர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ஹமாஸ் தீவிர​வாதிகள் அரக்கர்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. இஸ்ரேலியர்​களின் உடல் நலிவுக்கு ​காரணமான ஹமாஸ் குழுவை ​முற்றிலும் அழிக்க உறுதியேற்க வேண்டும்​ என்​றார்​.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து