முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருடனான சந்திப்பின் போது திருமாவளவன் முன்வைத்த 4 முக்கிய கோரிக்கைகள்

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      தமிழகம்
Thirumavalavan 2023-09-26

Source: provided

சென்னை : சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டானை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  நான்கு முக்கிய கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 கடந்த நான்கு ஆண்டுகளாக பட்டியல் சமூக மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக புரட்சியாளர் அம்பேத்கர், பண்டிதர் அயோத்திதாசர் பெயரிலான திட்டங்கள் உட்பட தாங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அதற்காக எமது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

இந்நிலையில் தங்களது மேலான பார்வைக்குப் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:

1) பட்டியல் சமூகத்தினரை வணிகர்களாக வளர்த்தெடுக்கும் வகையில், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் வணிக வளாகங்களை அமைத்துத் தருவதற்குத் திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும்.

2)  சாதி மற்றும் மத அடிப்படைவாத சக்திகளின் வெறுப்பு பிரச்சாரத்தின் விளைவாக பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன . எனவே, சாதிய வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த சட்டப்பூர்வமான உறுதிமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

3) வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த வழக்கில்  உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க  ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி ஒருவரின் தலைமையில் "ஒரு நபர் விசாரணை ஆணையம்" ஒன்றை அமைக்க வேண்டும்.

4) தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த "200 பாய்ண்ட் ரோஸ்டர் முறையை" ஒரு வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்ததையடுத்து அந்த வழக்குக்கு சற்றும் தொடர்பே இல்லாத பட்டியல் வகுப்பினரின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. பட்டியல் சமூக அதிகாரிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பதவி உயர்வுக்கான சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து