முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதியை சீர்குலைக்கும் முயற்சியை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      தமிழகம்
Ops 2024-12-13

Source: provided

சென்னை : அமைதியை சீர்குலைக்கும் முயற்சியை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளதாகவும், தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க சதி நடப்பதாகவும் பேசி இருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது என்பது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்ற வளாகங்கள், காவல் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்துகள் என எங்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. 

போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது என்ன நடக்குமோ என்ற பீதியில் பொதுமக்கள் இருக்கின்றார்கள்.  சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு வன்முறைக் காடாக காட்சியளிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று முதலமைச்சர் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.

அடுத்தபடியாக, தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க சதி நடப்பதாக முதல்வர் பேசி இருக்கிறார். சதியைத் தடுக்க வேண்டிய இடத்தில் முதல்வர்  இருக்கிறார். அமைதியை நிலை நாட்ட வேண்டிய முதல்வரே அமைதியை குலைக்க சதி நடப்பதாகக் கூறுவது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு

அமைதியை சீர்குலைக்க சதி நடக்கிறது என்றால் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அந்த அதிகாரம் முதல்வர் கையில்தான் இருக்கிறது. இதைச் செய்யாமல், முதல்-அமைச்சரே அமைதியை சீர்குலைக்க சதி நடக்கிறது என்று சொல்வது, தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு,  முதல்வர் தனக்குள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி, இனியாவது, அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து