முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. தலைவர் விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      தமிழகம்
Prashant-Kishore 2024 05 21

Source: provided

சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்  சந்தித்து பேசினார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்து விஜய், பிரசாந்த் கிஷோருடன் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விஜய்-பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ள பிரசாந்த் கிஷோர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் வியூக அமைப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மார்ச் முதல் வாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பான தரவுகள் மற்றும் திட்டமிடல்களை ஆதவ் அர்ஜுனா மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து