Idhayam Matrimony

200 ரூபாய் தாள்களை ரத்து செய்யும் திட்டம் இல்லை: ஆர்.பி.ஐ. தகவல்

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2025      இந்தியா
RBI- 2023-04-06

Source: provided

மும்பை : 200 ரூபாய் தாள்களை ரத்து செய்யும் எந்த திட்டமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தற்போதைக்கு 200 ரூபாய் தாள்களை ரத்து செய்யும் எந்த திட்டமும் இல்லை. தற்போது ஏராளமான ரூ. 500 மற்றும் ரூ. 200 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. எனவே, மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களிடம் 200 ரூபாய் தாள்கள் இருந்தால் அவை உண்மையானவையா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறும், யாராவது பணம் கொடுத்தால் அது உண்மையான தாள்களா என்பதை உறுதி செய்துகொண்டு வாங்குமாறும், மற்றவர்களுக்குக் கொடுக்கும்போதும் அதனை உறுதி செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியிருக்கிறது.

அது மட்டுமல்லாமல், ரூ. 200 தாள்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்துகொள்வதற்கான வழிகளையும் தெளிவுபடுத்தியிருக்கிறது. ரூ. 200 தாள்களில் மகாத்மா காந்தியின் படம் தெளிவாக இருக்கும். நுண் எழுத்துகளில் ஆர்.பி.ஐ. , பாரத், இந்தியா என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். ரூ. 200 என்றும் மிகச் சிறிதாக எழுதப்பட்டிருக்கும். வலதுபுறத்தில் அசோகர் தூண் இருக்கும். எனவே, இவற்றையெல்லாம் கவனித்து ரூபாய்த் தாள்களை வாங்குவதையும் மற்றவர்களுக்குக் கொடுப்பதையும் உறுதி செய்துகொள்ளுமாறு மக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து