முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வருமான வரியை மக்களவையில் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      இந்தியா
Nirmala-Sitharaman-2025-02-

புதுடெல்லி, புதிய வருமான வரியை மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

புதிய வருமான வரி சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், அது தொடர்பான மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் பட்ஜெட் உரையின்போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன்படி, புதிய வருமான வரி மசோதா 2025, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மசோதாவில் நீளமான சொற்களுக்கு பதில் சிறிய சொற்கள் இடம்பெற்றுள்ளதாகவும், முந்தைய ஆண்டு, மதிப்பீட்டு ஆண்டு ஆகிய சொற்களுக்கு பதில், வரி ஆண்டு என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, புதிய வருமான வரி சட்டம் ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட உள்ளது. இந்த சட்டம் அடுத்த நிதியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்ற நிலையில் மக்களவை மார்ச் 10-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து