முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்போது லோக்சபா தேர்தல் நடந்தால் தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ. ஆட்சியை பிடிக்கும் புதிய கருத்துக்கணிப்பில் தகவல்

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      இந்தியா
BJP 2024-03-05

Source: provided

புதுடில்லி: தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடந்தால் பா.ஜ., தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று பிரபல தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இண்டியா கூட்டணி 234 தொகுதிகளை பிடித்தது. பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறி வந்த நிலையில், அந்தக் கட்சிக்கு 240 இடங்களே கிடைத்தன. இதனால், கூட்டணி கட்சிகளின் தயவால் ஆட்சியமைத்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய தேதியில் லோக்சபா தேர்தல் நடந்தால் பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தி இண்டியா டுடே மற்றும் சிஓட்டர் மூட் ஆப் தி நேஷன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அந்த நிறுவனமானது, ஜன.,2ம் தேதி முதல் பிப்.,9ம் தேதி வரையில் நாடு முழுவதும் 1,25,123 பேரிடம் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதில், ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ. கூட்டணி 343 இடங்களை பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல, 232 இடங்களை பிடித்த இண்டியா கூட்டணிக்கு 188ஆக குறையும் என்றும் தெரிகிறது. குறிப்பாக, பா.ஜ., 281 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் 99 தொகுதிகளை பெற்ற காங்கிரசுக்கு 78ஆக குறையும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து