முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகையிலை பழக்கத்திற்கு அடிமையான மகளை பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      இந்தியா
Suicide 2023 04 29

பெங்களூரு, புகையிலை பழக்கத்திற்கு அடிமையான மகளை பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் கர்ஜகி கிராமத்தை சேர்ந்தவர் பீபிஜா சோண்டி (வயது 18). இவர் அதே பகுதியில் வீடு ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் பீபிஜா புகையிலை போடும் பழக்கத்துக்கு அடிமையானார். இதை அறிந்த பெற்றோர் பீபிஜாவை கண்டித்தனர். ஆனால் அவா் கேட்கவில்லை. தொடர்ந்து புகையிலையை பயன்படுத்தி வந்தார். இதனால் கோபம் அடைந்த பெற்றோர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பீபிஜாவை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த பீபிஜா சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் பிணமாக தொங்குவதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து ஹாவேரி புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் பீபிஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஹாவேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெற்றோர் புகையிலை பழக்கத்தை கண்டித்ததால் தூக்குப்போட்டு பீபிஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து