முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் காவலர் பாலியல் புகார்: ஐ.பி.எஸ். அதிகாரி சஸ்பெண்ட்

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      தமிழகம்
polies

Source: provided

சென்னை: பெண் காவலர் அளித்த பாலியல் புகார் அடிப்படையில், சென்னை மாநகர போலீஸ் வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர் மகேஷ் குமார் (ஐ.பி.எஸ்.  அதிகாரி) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர போலீஸ் போக்குவரத்து பிரிவில் வடக்கு மண்டல இணை ஆணையராக டி.ஐ.ஜி. அந்தஸ்தில் பணியாற்றி வருபவர் மகேஷ் குமார். ஐ.பி.எஸ்.  அதிகாரி. இவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் டி.ஜி.பி.  இடம் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், மூத்த ஐ.பி.எஸ்.  அதிகாரி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு விசாரணை நடத்தியது. இந்தக் குழு விசாரணையில், புகாரில் அடிப்படை முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐ.பி.எஸ்.  அதிகாரி மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து