முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1961-ம் ஆண்டு சட்டத்திற்கு பதிலாக புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      இந்தியா
Nirmala-Sitharaman-2025-02-

புதுடில்லி, மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  நேற்று தாக்கல் செய்தார்.

கடந்த 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்தக் காலத்தில் அந்தச் சட்டத்தில் எண்ணற்ற திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்தங்களால் அந்தச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு அதிக சுமைகொண்டதாகிவிட்டதுடன், அதைப் புரிந்துகொள்வதும் கடினமாகிவிட்டது. அத்துடன் நேரடி வரி நிா்வாகத் திறனிலும் இடையூறு ஏற்பட்டது.

இவற்றைக் கருத்தில் கொண்டு எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யவுள்ளார் நிர்மலா சீதாராமன்.

622 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில், புதிதாக எந்த வரிகளும் சோ்க்கப்படவில்லை. ஆனால் 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாா்த்தைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. நீளமான வாக்கியங்களுக்குப் பதிலாக சிறிய வாக்கியங்களுடன் படிப்பவா் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மசோதாவில் சோ்க்கப்பட்டுள்ள ‘வரிசெலுத்துவோா் சாசனம்’ வரிசெலுத்துவோரின் உரிமைகள் மற்றும் கடமைகளை எடுத்துரைக்கின்றன.

‘வரி ஆண்டு’: 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘முந்தைய ஆண்டு’ என்ற வாா்த்தையும், ‘மதிப்பீட்டு ஆண்டு’ வாா்த்தையும் புதிய மசோதாவில் கைவிடப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு முந்தைய ஆண்டு (2023-24) ஈட்டிய வருமானத்துக்கு 2024-25-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் வரி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் புதிய மசோதா மூலம், முந்தைய மற்றும் மதிப்பீடு ஆண்டுகளுக்குப் பதிலாக வரி ஆண்டு என்ற வாா்த்தை மட்டும் பயன்படுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து