முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை விஜயலட்சுமி வழக்கில் அடுத்த வாரம் அறிக்கை தாக்கல்

சனிக்கிழமை, 1 மார்ச் 2025      தமிழகம்
Seeman 2023 01 22

Source: provided

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் வளசரவாக்கம் போலீசார் சீமானிடம் நேற்று முன்தினம் இரவு  ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விஜயலட்சுமி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளின் பேரில் 63 கேள்விகள் சீமானிடம் கேட்கப்பட்டன. விஜயலட்சுமியுடன் ஏற்பட்ட பழக்கம், இருவரும் ஒன்றாக இருந்தது, பணம் கொடுத்ததாக கூறப்படுவது போன்ற விசயங்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சீமான் பதில் அளித்துள்ளார்.

இதனை வளசரவாக்கம் போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். இருவரும் சம்மதத்தின் பேரிலேயே ஒன்றாக இருந்தோம் என்று சீமான் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து அடுத்த வாரத்தில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, "இந்த வழக்கு விசாரணை, கோர்ட்டு உத்தரவின் பேரிலேயே விரைவுப்படுத்தப் பட்டுள்ளதாகவும், 6 வாரங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து