முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதை பொருளை கடத்தியவர்கள் கைது

சனிக்கிழமை, 1 மார்ச் 2025      இந்தியா
Jail

அசாம், வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

சாச்சார் மாவட்டத்தில் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சில்தூபி பகுதியில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு வந்த ஓர் வாகனத்தை சோதனைச் செய்ததில் அதில் 415 கிராம் அளவிலான ஹிராயின் எனும் போதைப் பொருள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அதை கடத்திய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ. 2 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த காவல் துறையினருக்கு முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து